May 31, 2011

நான் யார்... நீ யார்...

திரைப்படம்: குடியிருந்த கோவில் (1968)
இசை: M.S. விசுவநாதன்
பாடலாசிரியர்: புலமைபித்தன்
பாடியவர்: T.M. சௌந்தரராஜன்
======================================

நான் யார் நான் யார் நீ யார்
நாலும் தெரிந்தவர் யார் யார்
தாய் யார் மகன் யார் தெரியார்
தந்தை என்பார் அவர் யார் யார்
தாய் யார் மகன் யார் தெரியார்
தந்தை என்பார் அவர் யார் யார்
நான் யார் நான் யார் நீ யார்

உறவார் பகையார்
உண்மையை உணரார்
உனக்கே நீ யாரோ?
வருவார் இருப்பார் போவார்
நிலையாய் வாழ்வார் யார் யாரோ?

நான் யார்...

உள்ளார் புசிப்பார் இல்லார் பசிப்பார்
உதவிக்கு யார் யாரோ?
நல்லார் தீயார் உயர்ந்தார் தாழ்ந்தார்
நமக்குள் யார் யாரோ ?
அடிப்பார் வலியார் துடிப்பார் மெலியார்
தடுப்பார் யார் யாரோ ?
எடுப்பார் சிரிப்பார் இழப்பார் அழுவார்
எதிர்ப்பார் யார் யாரோ ?
எதிர்ப்பார் யார் யாரோ ?

நான் யார்...

பிணியார் வருவார் மருந்தார் தருவார்
பிழைப்பார் யார் யாரோ?
உயிரார் பறப்பார் உடலார் கிடப்பார்
துணை யார் வருவாரோ?
நரியார் நாயார் கடிப்பார் முடிப்பார்
நாளைக்கு யார் யாரோ?
பிறந்தார் இருந்தார் நடந்தார் கிடந்தார்
முடிந்தார் யார் யாரோ ?
முடிந்தார் யார் யாரோ ?

நான் யார்...

May 23, 2011

அச்சம் என்பது மடமையடா...

திரைப்படம்: மன்னாதி மன்னன் (1960)
இசை: M.S. விசுவநாதன்,ராமமூர்த்தி
பாடலாசிரியர்: கண்ணதாசன்
பாடியவர்: T.M. சௌந்தரராஜன்
====================================

அச்சம் என்பது மடமையடா...
அஞ்சாமை திராவிடர் உடமையடா...

அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா

கனக விசயரின் முடித்தலை நெரித்து
கல்லினை வைத்தான் சேரமகன்
இமய வரம்பினில் மீன் கொடி ஏற்றி
இசைபட வாழ்ந்தான் பாண்டியனே

அச்சம்...

கருவினில் வளரும் மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை
களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம்
காத்திட எழுவான் அவள் பிள்ளை

அச்சம்...

வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்

அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா