Jul 18, 2011

என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே

திரைப்படம்: பணத்தோட்டம் (1963)
இசை: விசுவநாதன் ராமமூர்த்தி
பாடலாசிரியர்: கண்ணதாசன்
பாடியவர்: T.M. சௌந்தரராஜன்

=======================================

என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே
 
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே

பின்னாலே தெரிவது அடிச்சுவடு
முன்னாலே இருப்பது அவன் வீடு
நடுவினிலே நீ விளையாடு
நல்லதை நினைத்தே போராடு

நல்லதை நினைத்தே போராடு

என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே

ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே

உலகத்தில் திருடர்கள் சரி பாதி
ஊமைகள் குருடர்கள் அதில் பாதி
கலகத்தில் பிறப்பது தான் நீதி
மனம் கலங்காதே மதி மயங்காதே
கலங்காதே மதி மயங்காதே

என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே
 
 
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே

மனதுக்கு மட்டும் பயந்துவிடு
மானத்தை உடலில் கலந்துவிடு
இருக்கிற வரையில் வாழ்ந்துவிடு
இரண்டினில் ஒன்று பார்த்துவிடு
இரண்டினில் ஒன்று பார்த்துவிடு

என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே

ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே

Jul 11, 2011

சிரித்து வாழ வேண்டும்...

திரைப்படம்: உலகம் சுற்றும் வாலிபன் (1973)
இசை: M.S. விசுவநாதன்
பாடலாசிரியர்: புலமைபித்தன்
பாடியவர்: T.M. சௌந்தரராஜன்

====================================================


சிரித்து வாழ வேண்டும்
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே
சிரித்து வாழ வேண்டும்
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே
உழைத்து வாழ வேண்டும்
பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே
உழைத்து வாழ வேண்டும்
பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே

சிரித்து வாழ வேண்டும்
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே

அன்பில் வாழும் இதயம் தன்னை
தெய்வம் கண்டால் வணங்கும்

அன்பில் வாழும் இதயம் தன்னை
தெய்வம் கண்டால் வணங்கும்
ஆசை இல்லா மனிதர் தம்மை
துன்பம் எங்கே நெருங்கும்

பொன்னில் இன்பம் புகழில் இன்பம்
என்றே நெஞ்சம் மயங்கும்
பூவை போல சிரிக்கும் உன்னை
கண்டால் உண்மை விளங்கும்

சிரித்து வாழ வேண்டும்
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே

முள்ளில் ரோஜா மலர்ந்ததாலே
முள்ளுக்கு என்ன பெருமை
சிப்பிக்குள்ளே பிறந்ததாலே
முத்துக்கு என்ன சிறுமை

எங்கே நன்மை இருந்த போதும்
ஏற்றுக் கொள்ளும் உலகம்
அங்கே வந்து தழுவிக் கொண்டு
போற்றும் நல்ல இதயம்

சிரித்து வாழ வேண்டும்
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே

வானில் நீந்தும் நிலவில்
நாளை பள்ளிக்கூடம் நடக்கும்
காற்றில் ஏறி பயணம் செல்ல
பாதை அங்கே இருக்கும்

எங்கும் வாழும் மழலை செல்வம்
ஒன்றாய் சேர்ந்து படிக்கும்
இல்லை ஜாதி மதமும் இல்லை
என்றே பாடி சிரிக்கும்

சிரித்து வாழ வேண்டும்
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே