உன் கன்னம் தொட்ட
காற்று கேட்டது
இத்தனை மென்மையாய்
என்னை வருடியது
யார் என்று!?
==================================================================
செல் ஃபோனில் யாரிடமோ
நீ 'யாரு பேசுறது?' என்று கேட்டாய்...
அவ்வளவுதான்
செல் ஃபோனுக்கே உயிர் வந்து
'நான் தான் பேசுறேன்' என்றது
==================================================================
ஹை!!!
எனக்கு பிடித்த
ஐஸ் க்ரீம் என்று
குதூகலித்தாய்
ஐஸ் க்ரீமோ
ஹை!!!
எனக்கு பிடித்த
உதடு என்று
உருகியது
==================================================================
நீ உதடு
சுழிக்கும் போது
என் இதயம்
சுளுக்கிக் கொள்கிறது...
==================================================================
கண்களில் மட்டுமல்ல
உன் இதழ்களிலும் தான்
எத்தனை அபிநயங்கள்...
==================================================================
வளர் பிறையும்
தேய் பிறையுமாய்
உன் மேனியெங்கும் தான்
எத்தனை பிறைகள்!!!
==================================================================
நீ சேலையணிந்த இரவுகளில்
தேவைப்பட்டதில்லை
எனக்கொரு போர்வை