சில நாட்களுக்கு முன்பு மதுரை போய் வந்தோம்.
College House!!! நாங்கள் மதுரையில் தங்கிய hotel, என் பழைய ஞாபங்களை கிளறி விட்டது.
அப்போதெல்லாம் (1990’s) பேருந்து பிரயானம் எனக்கு ஆகவே ஆகாது. Bus ஏறியதும் அம்மா மடியிலோ அப்பா மடியிலோ படுத்துக்கொள்வேன். அரை மணி நேர பயணம் கூட..... இஞ்சி மரப்பா விற்பவர் சொல்லும் அத்தனை உபாதைகளையும் எனக்குள் இறக்கிவிடும். Poppins, Torino போன்ற வஸ்துக்களால் சிறிது நேரம் சமாளிப்பேன். பிறகு மீண்டும் அதே இஞ்சி மரப்பா list தான்.
இத்தனைக்கும் பேருந்தில் தொடர்பயணம் செல்வது அதிக பட்சம் 2 1/2 மணி நேரம் தான். மதுரை இல்லாவிட்டால் மாயவரம் (எ) மயிலாடுதுறை. இவைதான் நான் என் சிறு வயதில் அதிகம் சென்ற ஊர்களாக இருக்கும்.
மதுரைக்கு போகும் போது என் பெரியப்பா பெரும்பாலும் College House-ல் தான் ரூம் எடுப்பார். பெரியதோர் entrance இருக்கும் hotel அந்த காலக்கட்டத்தில் அதுவாகத்தான் இருந்திருக்கும். கார்களும், வேன்களும் நிறுத்தி வைக்க parking இருக்கும். அப்போதிருந்த ஹோட்டல்களை விட அது பிரமாண்டமாய் மிக பிரமாண்டமாய் இருக்கும்.
நாங்கள் புதுக்கோட்டையிலிருந்து மதுரை செல்வோம். மதுரை இரயில் நிலையத்திலிருந்து மிக அருகில் இருக்கும், College House. அங்கே பொம்மை கடைகளும், துணிக் கடைகளும், புத்தகக் கடைகளும் ஒரு கூரையின் கீழிருக்கும். மிகவும் சந்தோஷமாக எல்லா பொம்மைகளையும் வாங்க வேண்டும் என்று அப்பாவிடம் சொல்வேன். அம்மாவிடம் வாங்கிவிட்டு(!?) அமைதியாக நகர்ந்து விடுவேன்.
மனசு கேட்காமல் பொம்மை துப்பாக்கியும் கண்ணாடியும் வாங்கி தருவார் அப்பா. அடுத்த இரண்டு நாள் கூட அவைகள் என்னோடு இருக்காது என்பது அம்மாவுக்கு மட்டுமே புரிந்த உண்மை. அதுவேதான் நடக்கவும் செய்யும்.
College House-ல் இப்போது நிறைய மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்த்தேன். Neww College House என்பதைத் தவிற வேரொன்றும் மாற்றம் இல்லை. பெயரில் இருக்கும் இரண்டாவது 'W' பார்த்தாவது புரிந்திருக்க வேண்டும் எனக்கு. என்ன செய்ய? காலம் கடந்துவிட்டது.
Hotel Room-க்குள் அய்யகோ!!! 20 வருடதுக்கு முந்தைய regulator-ம் விரல் பிடி switch-களும் இன்னமும் இருந்தது எனக்கு ஆச்சர்யமாக(அதிர்ச்சியாக) இருந்தது. "இந்த Model-அ மாத்தவே மாட்டாங்களா" என்னும் விவேக் dialogue mind voice-ல் ஓடியது. சமகால switch-களும் இருந்தது சற்று ஆறுதலாக இருந்தது. Plug point-களும் இரண்டு தான்.
Remote வைத்த TV, இன்னுமொரு ஆச்சர்யம். ஆனால் Remote வேலை செய்யவில்லை. வந்தது கோயிலுக்கு போக, சுற்றி பார்க்க, என்பதால் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
ஒரே ஆறுதல் கடமைகளை முடிக்கும் இடம் சுத்தமாக இருந்தது தான்.
பிறகு அழகர் கோயிலுக்கும், என் அப்பன் முருகன் வீற்றிருக்கும் பழமுதிர்ச்சோலைக்கும் சென்று வந்தோம். வழக்கம் போல் மனிதர்களுக்கு இணையாக குரங்குகளும் ஈக்களும் சுதந்திரமாக சுற்றி திரிந்தன.
சென்று வந்த புகைபடங்கள் சில...
No comments:
Post a Comment