Oct 17, 2011

காதல் 1

ஒரு நாள் மழையில்
நிரம்பும் ஏரி போன்றதல்ல
காதல்;
ஒவ்வொரு நாளும்
பொழியும் மேகத்தை உள்வாங்கி
வளரும் கடல் போன்றது

Oct 14, 2011

கொடுத்ததெல்லாம் கொடுத்தான்

திரைப்படம்: படகோட்டி (1964)
இசை: M.S. விசுவநாதன்
பாடலாசிரியர்: வாலி
பாடியவர்: T.M. சௌந்தரராஜன்

====================================

கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான்
இல்லை ஊருக்காகக் கொடுத்தான்

கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான்
இல்லை ஊருக்காகக் கொடுத்தான்

மண் குடிசை வாசலென்றால்
தென்றல் வர வெறுத்திடுமா
மாலைநிலா ஏழையென்றால்
வெளிச்சம் தர மறுத்திடுமா
உனக்காக ஒன்று எனக்காக ஒன்று
ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை

கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான்
இல்லை ஊருக்காகக் கொடுத்தான்

இல்லை என்போர் இருக்கையிலே
இருப்பவர்கள் இல்லை என்பார்
கிடைத்தவர்கள் பிழைத்துக்கொண்டார்
உழைத்தவர்கள் தெருவில் நின்றார்
மடி நிறைய பொருள் இருக்கும்
மனம் நிறைய இருள் இருக்கும்
எதுவந்த போதும் பொதுவென்று வைத்து
வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம்

கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான்
இல்லை ஊருக்காகக் கொடுத்தான்

Oct 5, 2011

ஏன் என்ற கேள்வி

திரைப்படம்: ஆயிரத்தில் ஒருவன் (1965)
இசை: விசுவநாதன் ராமமூர்த்தி
பாடலாசிரியர்: வாலி
பாடியவர்: T.M. சௌந்தரராஜன்
=============================================== 

ஏன் என்ற கேள்வி
இன்று கேட்காமல் வாழ்க்கை இல்லை
நான் என்ற எண்ணம்
கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை

ஏன் என்ற கேள்வி
இன்று கேட்காமல் வாழ்க்கை இல்லை
நான் என்ற எண்ணம்
கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை


பகுத்தறிவு பிறந்ததெல்லாம்
கேள்விகள் கேட்டதனாலே
பகுத்தறிவு பிறந்ததெல்லாம்
கேள்விகள் கேட்டதனாலே

உரிமைகளை பெறுவதெல்லாம்
உணர்ச்சிகள் உள்ளதனாலே
உரிமைகளை பெறுவதெல்லாம்
உணர்ச்சிகள் உள்ளதனாலே

ஏன் என்ற கேள்வி
இன்று கேட்காமல் வாழ்க்கை இல்லை
நான் என்ற எண்ணம்
கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை

வசனம்:-

ஆண்1:  காலா காலத்துக்கும் இப்படியே உழைச்சிக்கிட்டே இருந்து
இந்த கன்னித்தீவு மண்ணுக்கே எருவாக வேண்டியது தானா?

ஆண்2: நம்ம சொந்த ஊருக்கு போவதெப்போ?

ஆண்3: புள்ள குட்டி முகத்தை பாக்குறதெப்போ?
ஆண்4: இன்னும் எத்தனை நாளைக்கு தான் பொறுமையா இருக்குறது?


ஓராயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே
நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே
ஓராயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே
நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே

வருங்காலத்திலே நம் பரம்பரைகள்
நாம் அடிமையில்லை என்று முழங்கட்டுமே
வருங்காலத்திலே நம் பரம்பரைகள்
நாம் அடிமையில்லை என்று முழங்கட்டுமே

ஏன் என்ற கேள்வி
இன்று கேட்காமல் வாழ்க்கை இல்லை
நான் என்ற எண்ணம்
கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை


வசனம்:

ஆண்: பூங்கொடி சீக்கிரமே இந்த தீவு சொர்க்க புரி ஆகிவிடும் போல இருக்கிறது.

பெண்: எல்லாம் இந்த அடிமைகளின் உழைப்பால் தானே?

ஆண்: சந்தேகமென்ன? நமக்கு வாய்த்த அடிமைகள் மிக மிக திறமைசாலிகள்.
ஆனால் வாய் தான் காது வரை இருக்கிறது


நீரோடைகள் கோடையில் காய்ந்திருக்கும்
மழைக்காலத்தில் வெள்ளங்கள் பாய்ந்திருக்கும்
நீரோடைகள் கோடையில் காய்ந்திருக்கும்
மழைக்காலத்தில் வெள்ளங்கள் பாய்ந்திருக்கும்
நம் தோள் வலியால் அந்த நாள் வரலாம்
அன்று ஏழை எளியவர்கள் நலம் பெறலாம்
முன்னேற்றம் என்பதெல்லாம் உழைப்பவர் உழைப்பதனாலே
கடமைகளை புரிவதெல்லாம் விடுதலை வேண்டுவதாலே

ஏன் என்ற கேள்வி
இன்று கேட்காமல் வாழ்க்கை இல்லை
நான் என்ற எண்ணம்
கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை

Sep 4, 2011

மனுஷன மனுஷன் பதிப்பு - 2

திரைப்படம்: தாய்க்குப்பின் தாரம் (1956)
இசை: K.V. மகாதேவன்
பாடலாசிரியர்: மருதகாசி
பாடியவர்: T.M. சௌந்தரராஜன்

=======================================


பாலும் தேனும் பெருகி ஓடுது
பறந்த சீமையிலே
நாம பொறந்த சீமையிலே
ஆனா பாடுபடுறவன் வயிறு காயுது
பாதி நாளையிலே

வருசத்தில் பாதி நாளையிலே

மனுஷன மனுஷன் சாப்பிடுறான்டா அருமைத்தம்பி
இது மாறுவதெப்போ வாழுவதெப்போ ஏழை தம்பி

மனுஷன மனுஷன் சாப்பிடுறான்டா அருமைத்தம்பி
இது மாறுவதெப்போ வாழுவதெப்போ ஏழை தம்பி

மானம் பொழியுது பூமி வெளயுது நாட்டிலே
நாம வாடி வதங்கி வேல செய்யிறோம் காட்டிலே
ஆனா தானியமெல்லாம் வேறே ஒருவன் கையிலே

தானியமெல்லாம் வேறே ஒருவன் கையிலே
இது தகாதுன்னு எடுத்து சொல்லியும் புரியலே

அதாலே
மனுஷன மனுஷன் சாப்பிடுறான்டா அருமைத்தம்பி
இது மாறுவதெப்போ வாழுவதெப்போ ஏழை தம்பி

ஆணவத்துக்கு அடி பணியாதே தம்பி
எதுக்கும் ஆமாஞ்சாமி போட்டு விடாதே தம்பி

பூனையை புலியாய் எண்ணி விடாதே தம்பி

பூனையை புலியாய் எண்ணி விடாதே தம்பி
உன்னை புரிஞ்சுக்காமலே நடக்காதேடா அருமைத்தம்பி

மனுஷன மனுஷன் சாப்பிடுறான்டா அருமைத்தம்பி
இது மாறுவதெப்போ வாழுவதெப்போ ஏழை தம்பி

மனுஷன மனுஷன் சாப்பிடுறான்டா அருமைத்தம்பி
இது மாறுவதெப்போ வாழுவதெப்போ ஏழை தம்பி

மனுஷன மனுஷன் பதிப்பு - 1

திரைப்படம்: தாய்க்குப்பின் தாரம் (1956)
இசை: K.V. மகாதேவன்
பாடலாசிரியர்: மருதகாசி
பாடியவர்: T.M. சௌந்தரராஜன்

=======================================



மனுஷன மனுஷன் சாப்பிடுறான்டா
தம்பி பயலே
இது மாறுவதெப்போ தீருவதெப்போ
நம்ம கவலே

மனுஷன மனுஷன் சாப்பிடுறான்டா
தம்பி பயலே
இது மாறுவதெப்போ தீருவதெப்போ
நம்ம கவலே



மானம் பொழியுது பூமி வெலயுது
தம்பி பயலே
நாம வாடி வதங்கி
வளப்படுத்துறோம் வயலே

மானம் பொழியுது பூமி வெலயுது
தம்பி பயலே
நாம வாடி வதங்கி
வளப்படுத்துறோம் வயலே
 
ஆனா தானியமெல்லாம்
வலுத்தவருடைய கையிலே
 
தானியமெல்லாம்
வலுத்தவருடைய கையிலே
இது தகாதுன்னு
எடுத்து சொல்லியும் புரியலே
 
அதாலே
மனுஷன மனுஷன் சாப்பிடுறான்டா
தம்பி பயலே
இது மாறுவதெப்போ தீருவதெப்போ
நம்ம கவலே

தரைய பாத்து நிக்குது
நல்ல கதிரு
தன் குறைய மறந்து
மேலே பாக்குது பதரு

தரைய பாத்து நிக்குது
நல்ல கதிரு
தன் குறைய மறந்து
மேலே பாக்குது பதரு

அது போல் அறிவு உள்ளது
அடங்கி கிடக்குது வீட்டிலே

அறிவு உள்ளது
அடங்கி கிடக்குது வீட்டிலே
எதுக்கும் ஆகாத சிலது
ஆர்பாட்டம் செய்யுது வெலியிலே
 
அதாலே
மனுஷன மனுஷன் சாப்பிடுறான்டா
தம்பி பயலே
இது மாறுவதெப்போ தீருவதெப்போ
நம்ம கவலே

ஆணவத்துக்கு அடி பணியாதே
தம்பி பயலே
எதுகும் ஆமாஞ்சாமி போட்டு விடாதே
தம்பி பயலே

ஆணவத்துக்கு அடி பணியாதே
தம்பி பயலே
எதுக்கும் ஆமாஞ்சாமி போட்டு விடாதே
தம்பி பயலே

பூனையை புலியாய் எண்ணி விடாதே
தம்பி பயலே

பூனையை புலியாய் எண்ணி விடாதே
தம்பி பயலே
ஒன்னை புரிஞ்சுக்காமலே நடுங்காதேடா
தம்பி பயலே

மனுஷன மனுஷன் சாப்பிடுறான்டா
தம்பி பயலே
இது மாறுவதெப்போ தீருவதெப்போ
நம்ம கவலே

மனுஷன மனுஷன் சாப்பிடுறான்டா
தம்பி பயலே
இது மாறுவதெப்போ தீருவதெப்போ
நம்ம கவலே

Aug 4, 2011

கடவுள் தந்த பாடம்

திரைப்படம்: நாடோடி (1966)
இசை: M.S. விசுவநாதன்
பாடலாசிரியர்: கண்ணதாசன்

பாடியவர்: T.M. சௌந்தரராஜன்


=======================================


கடவுள் தந்த பாடம்
இங்கு காணும் துன்பம் யாவும்
என்ன மனமோ என்ன குணமோ
இந்த மனிதன் கொண்ட கோலம்
மனிதன் கொண்ட கோலம்

கடவுள் தந்த பாடம்
இங்கு காணும் துன்பம் யாவும்
என்ன மனமோ என்ன குணமோ
இந்த மனிதன் கொண்ட கோலம்
மனிதன் கொண்ட கோலம்


பொருளேதுமின்றி கருவாக வைத்து
உருவாக்கி விட்டுவிட்டான்
அறிவென்ற ஒன்றை மரியாதையின்றி
இடம் மாற்றி வைத்துவிட்டான்


பொருளேதுமின்றி கருவாக வைத்து
உருவாக்கி விட்டுவிட்டான்
அறிவென்ற ஒன்றை மரியாதையின்றி
இடம் மாற்றி வைத்துவிட்டான்


கடவுள் தந்த பாடம்
இங்கு காணும் துன்பம் யாவும்
என்ன மனமோ என்ன குணமோ
இந்த மனிதன் கொண்ட கோலம்
மனிதன் கொண்ட கோலம்


நண்பர்கள் பகைவர்கள் யாரென்றும்
நல்லவர் கெட்டவர் யாரென்றும்

நண்பர்கள் பகைவர்கள் யாரென்றும்
நல்லவர் கெட்டவர் யாரென்றும்
பழகும் போதும் தெரிவதில்லை
பாழாய் போன இந்த பூமியிலே

பழகும் போதும் தெரிவதில்லை
பாழாய் போன இந்த பூமியிலே

முகத்துக்கு நேரே சிரிப்பவர் கண்கள்
முதுகுக்கு பின்னால் சீரும்
முகத்துதி பேசும் வளையும் குழையும்
காரியமானதும் மாறும்
காரியமானதும் மாறும்


கடவுள் தந்த பாடம்
இங்கு காணும் துன்பம் யாவும்
என்ன மனமோ என்ன குணமோ
இந்த மனிதன் கொண்ட கோலம்
மனிதன் கொண்ட கோலம்

கொடுப்பவன் தானே மேல் ஜாதி
கொடுக்காதவனே கீழ் ஜாதி


கொடுப்பவன் தானே மேல் ஜாதி
கொடுக்காதவனே கீழ் ஜாதி
படைத்தவன் பேரால் ஜாதி வைத்தான்
பாழாய் போன இந்த பூமியிலே


படைத்தவன் பேரால் ஜாதி வைத்தான்
பாழாய் போன இந்த பூமியிலே

நடப்பது யாவும் விதிப்படி என்றால்
வேதனை எப்படி தீரும்


நடப்பது யாவும் விதிப்படி என்றால்
வேதனை எப்படி தீரும்
உடைப்பதை உடைத்து
வளர்ப்பதை வளர்தால்
உலகம் உருப்படியாகும்

கடவுள் தந்த பாடம்
இங்கு காணும் துன்பம் யாவும்
என்ன மனமோ என்ன குணமோ
இந்த மனிதன் கொண்ட கோலம்
மனிதன் கொண்ட கோலம்


===================================
பி.கு: இந்த பாடல் 'கடவுள் செய்த பாவம்' என்று தொடங்கும் பதிப்பும்(version) உடையது.