Sep 4, 2011

மனுஷன மனுஷன் பதிப்பு - 1

திரைப்படம்: தாய்க்குப்பின் தாரம் (1956)
இசை: K.V. மகாதேவன்
பாடலாசிரியர்: மருதகாசி
பாடியவர்: T.M. சௌந்தரராஜன்

=======================================



மனுஷன மனுஷன் சாப்பிடுறான்டா
தம்பி பயலே
இது மாறுவதெப்போ தீருவதெப்போ
நம்ம கவலே

மனுஷன மனுஷன் சாப்பிடுறான்டா
தம்பி பயலே
இது மாறுவதெப்போ தீருவதெப்போ
நம்ம கவலே



மானம் பொழியுது பூமி வெலயுது
தம்பி பயலே
நாம வாடி வதங்கி
வளப்படுத்துறோம் வயலே

மானம் பொழியுது பூமி வெலயுது
தம்பி பயலே
நாம வாடி வதங்கி
வளப்படுத்துறோம் வயலே
 
ஆனா தானியமெல்லாம்
வலுத்தவருடைய கையிலே
 
தானியமெல்லாம்
வலுத்தவருடைய கையிலே
இது தகாதுன்னு
எடுத்து சொல்லியும் புரியலே
 
அதாலே
மனுஷன மனுஷன் சாப்பிடுறான்டா
தம்பி பயலே
இது மாறுவதெப்போ தீருவதெப்போ
நம்ம கவலே

தரைய பாத்து நிக்குது
நல்ல கதிரு
தன் குறைய மறந்து
மேலே பாக்குது பதரு

தரைய பாத்து நிக்குது
நல்ல கதிரு
தன் குறைய மறந்து
மேலே பாக்குது பதரு

அது போல் அறிவு உள்ளது
அடங்கி கிடக்குது வீட்டிலே

அறிவு உள்ளது
அடங்கி கிடக்குது வீட்டிலே
எதுக்கும் ஆகாத சிலது
ஆர்பாட்டம் செய்யுது வெலியிலே
 
அதாலே
மனுஷன மனுஷன் சாப்பிடுறான்டா
தம்பி பயலே
இது மாறுவதெப்போ தீருவதெப்போ
நம்ம கவலே

ஆணவத்துக்கு அடி பணியாதே
தம்பி பயலே
எதுகும் ஆமாஞ்சாமி போட்டு விடாதே
தம்பி பயலே

ஆணவத்துக்கு அடி பணியாதே
தம்பி பயலே
எதுக்கும் ஆமாஞ்சாமி போட்டு விடாதே
தம்பி பயலே

பூனையை புலியாய் எண்ணி விடாதே
தம்பி பயலே

பூனையை புலியாய் எண்ணி விடாதே
தம்பி பயலே
ஒன்னை புரிஞ்சுக்காமலே நடுங்காதேடா
தம்பி பயலே

மனுஷன மனுஷன் சாப்பிடுறான்டா
தம்பி பயலே
இது மாறுவதெப்போ தீருவதெப்போ
நம்ம கவலே

மனுஷன மனுஷன் சாப்பிடுறான்டா
தம்பி பயலே
இது மாறுவதெப்போ தீருவதெப்போ
நம்ம கவலே

1 comment:

  1. paadal varigala padikum pothe paattu manasukula padama oduthu vinoth..

    ReplyDelete