Aug 4, 2011

கடவுள் தந்த பாடம்

திரைப்படம்: நாடோடி (1966)
இசை: M.S. விசுவநாதன்
பாடலாசிரியர்: கண்ணதாசன்

பாடியவர்: T.M. சௌந்தரராஜன்


=======================================


கடவுள் தந்த பாடம்
இங்கு காணும் துன்பம் யாவும்
என்ன மனமோ என்ன குணமோ
இந்த மனிதன் கொண்ட கோலம்
மனிதன் கொண்ட கோலம்

கடவுள் தந்த பாடம்
இங்கு காணும் துன்பம் யாவும்
என்ன மனமோ என்ன குணமோ
இந்த மனிதன் கொண்ட கோலம்
மனிதன் கொண்ட கோலம்


பொருளேதுமின்றி கருவாக வைத்து
உருவாக்கி விட்டுவிட்டான்
அறிவென்ற ஒன்றை மரியாதையின்றி
இடம் மாற்றி வைத்துவிட்டான்


பொருளேதுமின்றி கருவாக வைத்து
உருவாக்கி விட்டுவிட்டான்
அறிவென்ற ஒன்றை மரியாதையின்றி
இடம் மாற்றி வைத்துவிட்டான்


கடவுள் தந்த பாடம்
இங்கு காணும் துன்பம் யாவும்
என்ன மனமோ என்ன குணமோ
இந்த மனிதன் கொண்ட கோலம்
மனிதன் கொண்ட கோலம்


நண்பர்கள் பகைவர்கள் யாரென்றும்
நல்லவர் கெட்டவர் யாரென்றும்

நண்பர்கள் பகைவர்கள் யாரென்றும்
நல்லவர் கெட்டவர் யாரென்றும்
பழகும் போதும் தெரிவதில்லை
பாழாய் போன இந்த பூமியிலே

பழகும் போதும் தெரிவதில்லை
பாழாய் போன இந்த பூமியிலே

முகத்துக்கு நேரே சிரிப்பவர் கண்கள்
முதுகுக்கு பின்னால் சீரும்
முகத்துதி பேசும் வளையும் குழையும்
காரியமானதும் மாறும்
காரியமானதும் மாறும்


கடவுள் தந்த பாடம்
இங்கு காணும் துன்பம் யாவும்
என்ன மனமோ என்ன குணமோ
இந்த மனிதன் கொண்ட கோலம்
மனிதன் கொண்ட கோலம்

கொடுப்பவன் தானே மேல் ஜாதி
கொடுக்காதவனே கீழ் ஜாதி


கொடுப்பவன் தானே மேல் ஜாதி
கொடுக்காதவனே கீழ் ஜாதி
படைத்தவன் பேரால் ஜாதி வைத்தான்
பாழாய் போன இந்த பூமியிலே


படைத்தவன் பேரால் ஜாதி வைத்தான்
பாழாய் போன இந்த பூமியிலே

நடப்பது யாவும் விதிப்படி என்றால்
வேதனை எப்படி தீரும்


நடப்பது யாவும் விதிப்படி என்றால்
வேதனை எப்படி தீரும்
உடைப்பதை உடைத்து
வளர்ப்பதை வளர்தால்
உலகம் உருப்படியாகும்

கடவுள் தந்த பாடம்
இங்கு காணும் துன்பம் யாவும்
என்ன மனமோ என்ன குணமோ
இந்த மனிதன் கொண்ட கோலம்
மனிதன் கொண்ட கோலம்


===================================
பி.கு: இந்த பாடல் 'கடவுள் செய்த பாவம்' என்று தொடங்கும் பதிப்பும்(version) உடையது.

No comments:

Post a Comment