Sep 12, 2012

திடீர் கவிதை

திடீர் கவிதை கேட்டார்கள்
உன் பெயரை எழுதி தந்தேன்

May 15, 2012

காதல் 7

கதம்பமும் கூட...
உன் கூந்தலில்
வானவில் ஆகிறதே...!

Apr 16, 2012

மன அதிர்வு...

ரிக்டரால்
நில அதிர்வுகளை
அளக்கிறார்கள்

உன் கண்களால் ஏற்பட்ட
என் மன அதிர்வுகளை
எதைக் கொண்டு அளப்பது

Apr 9, 2012

த(வ)ருவது காதல்...

உன்னையும் அறியாமல்
உனக்கே தெரியாமல்
த(வ)ருவது


காதல்...

அன்பிற்கும் உண்டு அடைக்குந்தாழ்...

அன்பிற்கும் உண்டு அடைக்குந்தாழ்...


ஆம்...!


எனக்கான காதலை வைத்திருப்பவள் தான்
என் இதயத்தை திறக்க முடியும்...

வரைபடம்...

உனக்கான
வரைபடம் ஒன்றை
நீ உருவாக்கு...


தினமும்
உன்னுள் தொலைந்து போகும்
என்னை
தேடி கண்டுபிடிக்க ஏதுவாக இருக்கும்...

Apr 5, 2012

விதி...

உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது

புணர்ச்சி விதி


இதழ் மேல் இதழ் வந்து பதிவது...

காதல் விதி!!!

Apr 1, 2012

காதல் 6

நிலவை அழகென்றேன்...

உன் கன்களை
காணும் வரை...

நீர் இல்லா மீன்...

அறிவியல் திணருகிறது...

நீர் இல்லாமல்
இரு மீன்கள் வாழ்கிறதே

உன் முகத்தில் என்று...

Mar 28, 2012

Mar 26, 2012

மதுரை Visit...


சில நாட்களுக்கு முன்பு மதுரை போய் வந்தோம்.

College House!!! நாங்கள் மதுரையில் தங்கிய hotel, என் பழைய ஞாபங்களை கிளறி விட்டது.

அப்போதெல்லாம் (1990’s) பேருந்து பிரயானம் எனக்கு ஆகவே ஆகாது. Bus ஏறியதும் அம்மா மடியிலோ அப்பா மடியிலோ படுத்துக்கொள்வேன். அரை மணி நேர பயணம் கூட..... இஞ்சி மரப்பா விற்பவர் சொல்லும் அத்தனை உபாதைகளையும் எனக்குள் இறக்கிவிடும். Poppins, Torino போன்ற வஸ்துக்களால் சிறிது நேரம் சமாளிப்பேன். பிறகு மீண்டும் அதே இஞ்சி மரப்பா list தான்.

இத்தனைக்கும் பேருந்தில் தொடர்பயணம் செல்வது அதிக பட்சம் 2 1/2 மணி நேரம் தான். மதுரை இல்லாவிட்டால் மாயவரம் () மயிலாடுதுறை. இவைதான் நான் என் சிறு வயதில் அதிகம் சென்ற ஊர்களாக இருக்கும்.

மதுரைக்கு போகும் போது என் பெரியப்பா பெரும்பாலும் College House-ல் தான் ரூம் எடுப்பார். பெரியதோர் entrance இருக்கும் hotel அந்த காலக்கட்டத்தில் அதுவாகத்தான் இருந்திருக்கும். கார்களும், வேன்களும் நிறுத்தி வைக்க parking இருக்கும். அப்போதிருந்த ஹோட்டல்களை விட அது பிரமாண்டமாய் மிக பிரமாண்டமாய் இருக்கும்.

நாங்கள் புதுக்கோட்டையிலிருந்து மதுரை செல்வோம். மதுரை இரயில் நிலையத்திலிருந்து மிக அருகில் இருக்கும், College House. அங்கே பொம்மை கடைகளும், துணிக் கடைகளும், புத்தகக் கடைகளும் ஒரு கூரையின் கீழிருக்கும். மிகவும் சந்தோஷமாக எல்லா பொம்மைகளையும் வாங்க வேண்டும் என்று அப்பாவிடம் சொல்வேன். அம்மாவிடம் வாங்கிவிட்டு(!?) அமைதியாக நகர்ந்து விடுவேன்.

மனசு கேட்காமல் பொம்மை துப்பாக்கியும் கண்ணாடியும் வாங்கி தருவார் அப்பா. அடுத்த இரண்டு நாள் கூட அவைகள் என்னோடு இருக்காது என்பது அம்மாவுக்கு மட்டுமே புரிந்த உண்மை. அதுவேதான் நடக்கவும் செய்யும்.

College House-ல் இப்போது நிறைய மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்த்தேன். Neww College House என்பதைத் தவிற வேரொன்றும் மாற்றம் இல்லை. பெயரில் இருக்கும் இரண்டாவது 'W' பார்த்தாவது புரிந்திருக்க வேண்டும் எனக்கு. என்ன செய்ய? காலம் கடந்துவிட்டது.
Hotel Room-க்குள் அய்யகோ!!! 20 வருடதுக்கு முந்தைய regulator-ம் விரல் பிடி switch-களும் இன்னமும் இருந்தது எனக்கு ஆச்சர்யமாக(அதிர்ச்சியாக) இருந்தது. "இந்த Model- மாத்தவே மாட்டாங்களா" என்னும் விவேக் dialogue mind voice-ல் ஓடியது. சமகால switch-களும் இருந்தது சற்று ஆறுதலாக இருந்தது.  Plug point-களும் இரண்டு தான்.


Remote வைத்த TV, இன்னுமொரு ஆச்சர்யம். ஆனால் Remote வேலை செய்யவில்லை. வந்தது கோயிலுக்கு போக, சுற்றி பார்க்க, என்பதால் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஒரே ஆறுதல் கடமைகளை முடிக்கும் இடம் சுத்தமாக இருந்தது தான்.

பிறகு அழகர் கோயிலுக்கும், என் அப்பன் முருகன் வீற்றிருக்கும் பழமுதிர்ச்சோலைக்கும் சென்று வந்தோம். வழக்கம் போல் மனிதர்களுக்கு இணையாக குரங்குகளும் ஈக்களும் சுதந்திரமாக சுற்றி திரிந்தன.

சென்று வந்த புகைபடங்கள் சில...





இரவு பகல்

என் இரவை பகலாக்குகிறது
உன் கண்கள்...

சில நேரங்களில்...

பகலையும் கூட இரவாக்குகிறது!!!

Mar 7, 2012

எவ்ளோ நாள் தான் நானும்...

அவள்...
பசுத் தோல்
போர்த்திய புலி

"எவ்ளோ நாள் தான் நானும் வலிக்காத மாதிரியே நடிக்கிறது..."

Mar 6, 2012

வெட்க லட்சுமி

எனக்காக
என்ன வாங்கித் தருவ
என்றாள்...

பூ புடவை நகை...
பட்டியலிட்டேன்...

ஆனந்த லட்சுமி ஆனாள்...!

உனக்கு
என்ன வேணுமோ கேளு...
வாங்கித் தருவேன் என்றாள்...


ஆளுயரக் கண்ணாடி
முன்னாடி நில்லு...
அதுல தெரியிறத கொடு
என்றேன்...

வெட்க லட்சுமி ஆனாள்...!

Mar 5, 2012

காதல் 5

குழந்தையும் நீயும் ஒன்று

இருவருக்கும் பிடித்தது

"Bed time stories"

Feb 21, 2012

காதல் 4

நீ
எனக்காக வேண்டிக்கொள்கிறேன்
என்கிறாய்...

பக்தனுக்காக
கடவுளே
வேண்டிக்கொள்வது...

இதுவே
முதல் முறையாக
இருக்கும்...


===============================================


ஐஸ்
உருகும் தான்

ஆனால்
இவன் வைக்கும் ஐஸில்

உருகுவது நான் தான்

Feb 16, 2012

காதல் = சிறந்த உண்மை

"சிறந்த காதல்" என்றும்
"உண்மையான காதல்" என்றும்
உலகில் எதுவும் இல்லை

காதல் என்பதே
சிறந்த உண்மை தான்

அலைபேசி

தூரத்தில் இருப்பவரை
அருகில் கொண்டுவருவதும்

அருகில் இருப்பவரை
அந்நியமாக்குவதும்

உன் வரவு தான்

Feb 10, 2012

காதல் 3

பகலில்
என் நினைவுகளை களவாடுகிறாய்
இரவில்
என் கனவுகளை திருடுகிறாய்

ஆனாலும் வளர்கின்றன
என் நினைவுகளும் கனவுகளும்

உண்மையைச் சொல்
நீ திருடுகிறாயா...
இல்லை பதுக்கிவைத்து போகிறாயா...

காதல் வெண்பா...

நேர்-நேர் தேமா
உன் பேச்சு தேன் மா

நிரை-நேர் புளிமா
நீ நீ இனிக்கும் மா

நிரை-நிரை கருவிளம்
நிறை நிறை உன்னிடம்

நேர்-நிரை கூவிளம்
நீ நீ குயிலினம்

காதல் 2

என் களைப்பை போக்கி
களிப்பை தருகிறது
உன் நினைவு

========================================


கண்கள் இரண்டு
பார்வை ஒன்று
கால்கள் இரண்டு
பாதை ஒன்று
இதழ்கள் இரண்டு
முத்தம் ஒன்று
இதயங்கள் இரண்டு
காதல் ஒன்று