Mar 29, 2016

பெண் ஜீனி

"இத்தனை அழகான பெண் பூதமா!?" எங்கிருந்தோ கிடைத்த அற்புத விளக்கிலிருந்து வெளிப்பட்டவளைப் பார்த்து வியந்து கொண்டிருந்தான்.

"உங்களுக்கு என்ன வேண்டும்? செய்யக் காத்திருக்கிறேன்" என்றாள் அந்த பெண் பூதம்.

சின்ன சின்ன விஷயங்கள் தொடங்கி பைக், கார், வீடு, பெரிய அலுவலகத்தில் உயரிய வேலை என்று நீண்டு கொண்டே போனது.

'பூதமா இருந்தாலும் பெண் தானே' என்று அவளையே கேட்டு கிடைக்கப் பெற்றான். எல்லாம் முடிந்து, அவன் மயங்கிய நிலையில் "உங்களுக்கு என்ன வேண்டும்? செய்ய காத்திருக்கிறேன்" என்றது பூதம்.

"இதுவே போதும், இப்போ நான் செத்தாலும் கவலையில்ல" என்றான், தன் உடல் பற்பல துண்டுகளாக பிளவுபடுவதை உணராமல்.


1 comment: