Jun 1, 2016

எந்திரன் - Reloaded


"எஸ் இஸ் டு கிரீன்; நோ இஸ் டு ரெட்; ப்ளூ இஸ் டு டவுன்லோட் " சிகப்பு, பச்சை, நீல நிற விளக்குகள் மார்பில் பொருத்தப்பட்ட எந்திரனை ஆழமாக கவனித்தார் டாக்டர் வசீகரன். 'பேச்சு பயிற்சி மட்டும் தான் பாக்கி' தனக்குள் சொல்லிக் கொண்டார்.

செய்ய முடிந்த வேலை என்றால் பச்சை விளக்கும், செய்ய முடியாத வேலை என்றால் சிகப்பு விளக்கும் எறிந்தது. நீல விளக்கு மட்டும் எறிந்து கொண்டேயிருந்தது.

"பிரிங் மீ பர்கர் " நிதானமாக பச்சை விளக்கு எறிந்தது. சிறிது நேரத்தில் பர்கரை தயார் செய்து தந்தான் எந்திரன்.

"சாப்பிடு " பர்கரை நீட்டினார் வசீகரன். சிகப்பு விளக்கு எறிந்தது.

"நான் சொன்னதை செய்வது தானே உன் வேலை " பச்சை விளக்கு எறிந்தது.

"அப்போ இதை சாப்பிடு " மீண்டும் சிகப்பு விளக்கு எறிந்தது.

புன்னகையுடன் "நீ என் அடிமை. நான் சொன்னதை செய்வது தான் உன் வேலை " என்றார் வசீ.

"அம் நாட் யூர் ஸ்லேவ் " அதிர்ச்சியுடன் பதில் வந்த திசையில் வசீகரன் திரும்ப, அவரை நோக்கி வந்தது எந்திரன் வீசிய கத்தி.


No comments:

Post a Comment