சிங்கமுகன்
மனித
உடலில் யானையின் தலை, குதிரையின் தலை,
சிங்கத்தின் தலை, தாடியுடன் கையில்
எதையோ ஏந்தி நின்றிருந்த பெரியவர்,
நாக்கை நீட்டி விழிகளை பெரியதாக்கி
பல கைகளில் ஆயுதங்களோடு நின்றிருந்த பெண். எல்லாமே வீட்டின் சுவர்களிலும் தூண்களிலும் பொருத்தப்பட்டிருந்தன.
“டீன்! நீ என்ன பண்ணியிருக்கனு தெரியுமா? இதெல்லாம் சக்தி வாய்ந்தவைனு கேள்வி
பட்டிருக்கேன். எங்க மூதாதையர்கள் இதுல
சிலதை கடவுளாகக் கூட வழிபட்டிருக்காங்க. ஐயாயிரம்
வருடம் முந்தையதாகக்கூட இருக்கும்.”
“ரிலாக்ஸ்!!
பக்த். உங்க மூதாதையர்களுக்கு மூளை
ஜாஸ்தி” டீன் நிதானித்தபடி “ஆனாலும்
முட்டாளுங்க” என்றவனை முறைத்தான் பக்த்.
“பின்ன
என்ன பக்த்? இதெல்லாம் எவ்ளோ
அழகா இருக்கு. எவ்ளோ இன்ஜினியரிங், இமேஜினேஷன்
அதுவும் கல்லுல ஆர்ட். இந்த
முப்பத்தோராம் நூற்றாண்டுல இருக்குற டூல்ஸை வச்சு கூட
இந்த மாதிரி செய்யவே முடியாது.
மார்வலஸ்!!! சிம்ப்ளி மைன் ப்லோயிங்!!!” நக்கலாக
சிரித்த படியே “சிங்க தலையோட
ஒரு மனுஷன இமேஜின் பண்ணவங்க,
அதை கடவுள்னு சொல்றத என்னால ஏத்துக்கவே
முடியல பக்த்”
“அவைகளுக்கு
நாம எதிர் பார்க்காத அளவுக்கு
சக்திகள் இருக்கு. அவை வெளிப்படும் போது நம்மால ஒன்னும் செய்ய முடியாது” எச்சரிக்கும்
தொனியில் கூறினான் பக்த்.
“எப்டி? இந்த மலையை தூக்கிட்டு போற
பறக்கும் குரங்கு ஒன்னு இருக்கே, அது
என்னையும் தூக்கிட்டு போயிடும்னு சொல்றியா?” எளிறுகள் தெரிய எள்ளி நகைத்தான்
டீன்.
“உன்கிட்ட
பேசி பிரயோஜனம் இல்ல” என்றபடி அங்கிருந்து பக்த் நகர
“கோபப்படாத
பக்த். இதெல்லாமே வெறும் ஆர்ட் தான்.
இதுக்கு சக்தியும் கெடையாது ஒன்னும் கெடையாது” சொல்லிக் கொண்டிருக்கும்
போதே சுவரிலிருந்து பெயர்ந்து வந்த சிங்கமுகன் டீனை
தூக்கி தன் மடியில் வைத்து,
தன் நகக்கைகளை அவன் வயிற்றுக்குள் இறக்கினான்.
No comments:
Post a Comment