Mar 22, 2014

Bachelors

"நான்வேலைக்கு கிளம்புறேன்"

"சரி"

"சாப்பாடுசெஞ்சுட்டேன். Table-  இருக்கு"

"சரி"

"சாப்டுக்கோ"

"சரி"

"நான்போய் தூங்குறேன். Tired- இருக்கு"

உறங்கச்சென்றவன் எழுந்திருந்தான், பணிக்குச் சென்றவன் திரும்பியிருந்தான்.

"நான்போய் தூங்குறேன். Tired- இருக்கு"

"சரி"

"சாப்டுக்கோ"

"சரி"

"சாப்பாடுசெஞ்சுட்டேன். Table-  இருக்கு"

"சரி"

"நான்வேலைக்கு கிளம்புறேன்"

=======================================================================

மாலை மாற்று (palindrome) பற்றி இணையத்தில் துளாவியபோது திருஞானசம்பந்தர் எழுதிய மாலை மாற்றுபாடலை படித்துத் துணுக்குற்று ஒரு மணி நேரத்திற்குள்ளாகஎழுதியது தான் இந்த bachelors [தலைப்புஉபயம் - மனைவி] line palindrome கதை. இது சிறு முயற்சி.

மாலை மாற்று பற்றி தெரியாதவர்களுக்கு- எந்த திசையிலிருந்து வாசித்தாலும் ஒரே மாதிரி இருக்கும்சொல் அல்லது சொற்றொடர் மாலைமாற்று எனப்படும்.

உம்: விகடகவி; மாடு ஓடுமா

திருஞானசம்பந்தர்எழுதிய படலை படிக்க கீழிருக்கும்முகவரியை சொடுக்கவும்
http://www.shaivam.org/tamil/thirumurai/thiru03_117.htm


நன்றி,
வினோத்

4 comments:

  1. ஹா... ஹா... சரி தான்...

    தொடருங்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துக்கு நன்றி தனபாலன் சார்...

      Delete
  2. அருமை! இப்போ தான் இதைப்பற்றி கேள்வி படுகிறேன்.....

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துக்கு நன்றி.

      உண்மைதான். தமிழ் மொழியில் நமக்கு தெரியாத இன்னும் பல விசயங்கள் இருக்கிறது...

      ஆச்சரியங்களுக்கு காத்திருக்கிறேன்...

      Delete