Aug 17, 2014

வாலி-பண் வாலிபன்


படம் - வில்லுப்பாட்டுக்காரன் (1992)
இசை - இளையராஜா
பாடலாசிரியர் - கவிஞர் வாலி
பாடியவர் - மலேசிய வாசுதேவன்

மூன்று தலைமுறை பாடலாசிரியர் கவிஞர் வாலி. புதுமையாக எழுதக் கூடியவர். அவர் எழுதிய பாடல்களில் இதுவும் ஒன்று. வித்தியாசமான பாடல் இது. படித்துப் பாருங்களேன்.

தந்தேன் தந்தேன் இசை
செந்தேன் தந்தேன் அடி
தந்தேன் தந்தேன் இசை
செந்தேன் தந்தேன் அடி
கால காலங்கள் தேடிய ஞானத்தில்
தந்தேன் தந்தேன் இசை
செந்தேன் தந்தேன் அடியே

ஆனந்த ராகங்களை கிளியே இங்கேதான் கேட்டுக்கடி
ஆடாத ஆட்டங்கள்தான் கிளியே எங்கிட்ட ஏதுக்கடி

தந்தேன் தந்தேன் இசை
செந்தேன் தந்தேன் அடி
கால காலங்கள் தேடிய ஞானத்தில்
தந்தேன் தந்தேன் இசை
செந்தேன் தந்தேன் அடியே

ஏழைகள் காதுகளில்
செந்தேனள்ளி சேர்க்குற கலைஞனடி
தென்னாட்டுல இருக்கிற இதயங்களை
சங்கீதத்தில் ஈர்க்கிற இளைஞனடி
நாட்டுல கேட்டுக்கடி
இசையில் இங்கு நான் செஞ்ச சாதனைதான்
நாக்குல இருக்குதடி
எடுத்து தர ஆயிரம் கீர்த்தனைதான்
அலை அடிக்க அதை தடுக்க அணை எடுக்க
நினைத்ததென்ன
தள்ளு எட்டி நில்லு
எல்ல தாண்டுற சீண்டுற ஏண்டி நீ அளக்குற

தந்தேன் தந்தேன் இசை
செந்தேன் தந்தேன் அடி
கால காலங்கள் தேடிய ஞானத்தில்
தந்தேன் தந்தேன் இசை
செந்தேன் தந்தேன் அடியே

ஆனந்த ராகங்களை கிளியே இங்கேதான் கேட்டுக்கடி
ஆடாத ஆட்டங்கள்தான் கிளியே எங்கிட்ட ஏதுக்கடி

நீ இங்கு கேட்டதில்ல
அந்நாளிலே கிந்தனின் சரித்திரத்தை
திண்டாடிய நாட்டுக்கு இசையினிலே
தந்தாரடி என் எஸ் கே தன் கருத்தை
தேசத்தை திருத்திடத்தான்
கலைகள் என்று தெரிந்தது சேதியடி
நான் அந்த கலைஞனையே
நினைத்து இங்கு நடக்கிற ஜாதியடி
எனை அடக்க சிறை எடுக்க
சிறகடித்த இளைய கிளி
இன்று எதிர் நின்று
இந்த காலையை கங்கையில்
கால் கைகள் நடுங்குது

தந்தேன் தந்தேன் இசை
செந்தேன் தந்தேன் அடி
கால காலங்கள் தேடிய ஞானத்தில்
தந்தேன் தந்தேன் இசை
செந்தேன் தந்தேன் அடியே

ஆனந்த ராகங்களை கிளியே இங்கேதான் கேட்டுக்கடி
ஆடாத ஆட்டங்கள்தான் கிளியே எங்கிட்ட ஏதுக்கடி


இந்தப் பாடலில் இருக்கும் சிறப்பு பலருக்கும் தெரியாதது. உங்களுக்கு தெரியும் என்றால் மகிழ்ச்சியே. தெரியாதவர்கள் பாடலை மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள். அப்படியும் தெரியவில்லை என்றால் அடுத்த வரியை படிக்கவும்.

இது ஒரு 'உதடு ஒட்டாத' பாடல். அதாவது '' '' தமிழ் எழுத்துக்கள் இந்த பாடலில் இல்லை. ஆச்சரியமாக இருக்கிறதா... மீண்டும் இந்த பாடலை படித்து பார்க்க வேண்டும் என்று தோன்றுமே... நிற்க...

இந்த பாடலில் '' எழுத்தும் பயன்படுத்தப் படவில்லை. அந்த வகையில்  இது 'உதடு கடிக்காத' பாடலும் கூட.


ஆங்கில வார்த்தைகளும் அர்த்தமற்ற வார்த்தைகளும் பயன்படுத்தும் கவிஞராக அவ்வப்போது விமர்சிக்கப் படும் வாலியின் சிறந்த படைப்புகளுக்கு இந்த பாடல் ஒரு சோறு பதம்.

Aug 16, 2014

அஞ்சான் - விமர்சனம்

முன் குறிப்பு - விமர்சனம் படித்துவிட்டு படம் பார்ப்பவன் நான். படம் பார்த்து கதை கூட சொல்ல வராது எனக்கு. திரைப்பட விமர்சனம் எழுதும் அளவுக்கு ஞானமும் இல்லை என்பதால் எனக்கு தெரிந்த அளவில் எழுத முயல்கிறேன்.

கதை - நண்பனை கொன்ற வில்லனையும், துணை இருந்த துரோகிகளையும் பழி வாங்கும் கதை. அதற்கு தாதாக்கள் பின்னணி சேர்த்திருக்கிறார்கள்.

தாதா படம். ஆனால் அந்த mood படத்தில் இல்லவே இல்லை.  சூர்யா வித்யுத் நட்பை வார்த்தைகள் கொண்டு ஆழம் சேர்க்க முயன்றிருக்கிறார்கள். சூர்யா சமந்தா காதலில் ஆழம் இல்லை. சூர்யா சமந்தா சூரி தவிர மற்றவர் வாய்சுக்கும் வாயசைப்புக்கும் சம்மந்தமில்லாமல் இருப்பதால் கொரியன் நாடகம் பார்ப்பது போல் இருக்கிறது.

அஞ்சானில் என்ன செய்கிறார்கள் இவர்கள்:

சூர்யா - அடிக்கிறார், அடிக்கிறார், அடிச்சுகிட்டே இருக்கார். இதில் (ஆ)ரம்ப பில்டப்புகள் வேறு. நடிப்பில் குறையில்லை. அவரது கணக்கில் இன்னொரு படம்.

சமந்தா - இரண்டாம் பாதியில் முழுக்க போர்த்திக் கொண்டு வருகிறார், முதல் பாதியில் காற்றோட்டமான உடையில் வருகிறார், பாடல்களில் தாராளமாக வருகிறார் (பிகினி நடையும் உண்டு), மற்றபடி வண்டிக்கு பின்னால் ஓடி வருகிறார்.

வித்யுத் ஜாம்வால் - Second Hero கதாபாத்திரம்(பெயரளவில்). சொன்னதை செய்திருக்கிறார். நல்ல கலைஞனை வீணடித்திருக்கிறார்கள். இவர் வரும் சண்டை காட்சி மட்டுமே படத்தில் ஈர்க்கிறது. மனுஷன் செம்ம speed.

மனோஜ் பாஜ்பாய் - கச்சித வில்லன். நடிப்பில் கெட்டி.

சூரி, பிரம்மானந்தம் - சிரிப்பு சுத்தமா வரல.

Oneline - கதை ஓ.கே என்றாலும், திரைக்கதை சுத்தமாக சொதப்பியதால் அஞ்சான் நோஞ்சான்.

Aug 13, 2014

சுற்றுச்சூழல் கவிதைகள்


நெகிழிப் பைக்குள்
அடைப்பட்டுகிடக்கும் உலகத்தின்
சுவாசம்

==============================================================================

எதுவும் மக்கும் மண்ணில்
மண்ணே மக்கும் என்னில்
நெகிழி!!!

==============================================================================

குறிஞ்சியை பெயர்த்து கோபுரங்கள் செய்
முல்லையை அழித்து மாளிகை செய்
மருதத்தை கருக்கி தொழிற்கூடம் செய்
நெய்தலில் கழிவுகள் மூழ்கச் செய்
பாலையில் உனக்காக நீயே ஒரு கல்லறையும் செய்

==============================================================================

இரத்தம் நிறமற்றது!!!
ஆம்!!! பூமியின் இரத்தம் நிறமற்றது
அது மழை நீர்

==============================================================================

எங்கிருந்து பெறப்பட்டதோ
அங்கேயே கொடுக்கப்படுகிறது
மழைநீர் அறுவடை செய்