முன் குறிப்பு - விமர்சனம் படித்துவிட்டு படம் பார்ப்பவன் நான். படம் பார்த்து கதை கூட சொல்ல வராது எனக்கு. திரைப்பட விமர்சனம் எழுதும் அளவுக்கு ஞானமும் இல்லை என்பதால் எனக்கு தெரிந்த அளவில் எழுத முயல்கிறேன்.
கதை - நண்பனை கொன்ற வில்லனையும், துணை இருந்த துரோகிகளையும் பழி வாங்கும் கதை. அதற்கு தாதாக்கள் பின்னணி சேர்த்திருக்கிறார்கள்.
தாதா படம். ஆனால் அந்த mood படத்தில் இல்லவே இல்லை. சூர்யா வித்யுத் நட்பை வார்த்தைகள் கொண்டு ஆழம் சேர்க்க முயன்றிருக்கிறார்கள். சூர்யா சமந்தா காதலில் ஆழம் இல்லை. சூர்யா சமந்தா சூரி தவிர மற்றவர் வாய்சுக்கும் வாயசைப்புக்கும் சம்மந்தமில்லாமல் இருப்பதால் கொரியன் நாடகம் பார்ப்பது போல் இருக்கிறது.
அஞ்சானில் என்ன செய்கிறார்கள் இவர்கள்:
சூர்யா - அடிக்கிறார், அடிக்கிறார், அடிச்சுகிட்டே இருக்கார். இதில் (ஆ)ரம்ப பில்டப்புகள் வேறு. நடிப்பில் குறையில்லை. அவரது கணக்கில் இன்னொரு படம்.
சமந்தா - இரண்டாம் பாதியில் முழுக்க போர்த்திக் கொண்டு வருகிறார், முதல் பாதியில் காற்றோட்டமான உடையில் வருகிறார், பாடல்களில் தாராளமாக வருகிறார் (பிகினி நடையும் உண்டு), மற்றபடி வண்டிக்கு பின்னால் ஓடி வருகிறார்.
வித்யுத் ஜாம்வால் - Second Hero கதாபாத்திரம்(பெயரளவில்). சொன்னதை செய்திருக்கிறார். நல்ல கலைஞனை வீணடித்திருக்கிறார்கள். இவர் வரும் சண்டை காட்சி மட்டுமே படத்தில் ஈர்க்கிறது. மனுஷன் செம்ம speed.
மனோஜ் பாஜ்பாய் - கச்சித வில்லன். நடிப்பில் கெட்டி.
சூரி, பிரம்மானந்தம் - சிரிப்பு சுத்தமா வரல.
Oneline - கதை ஓ.கே என்றாலும், திரைக்கதை சுத்தமாக சொதப்பியதால் அஞ்சான் நோஞ்சான்.
No comments:
Post a Comment