Jun 22, 2016

சிங்கமுகன்

மனித உடலில் யானையின் தலை, குதிரையின் தலை, சிங்கத்தின் தலை, தாடியுடன் கையில் எதையோ ஏந்தி நின்றிருந்த பெரியவர், நாக்கை நீட்டி விழிகளை பெரியதாக்கி பல கைகளில் ஆயுதங்களோடு நின்றிருந்த பெண். எல்லாமே  வீட்டின் சுவர்களிலும் தூண்களிலும் பொருத்தப்பட்டிருந்தன.


டீன்! நீ என்ன பண்ணியிருக்கனு தெரியுமா? இதெல்லாம் சக்தி வாய்ந்தவைனு கேள்வி பட்டிருக்கேன். எங்க மூதாதையர்கள் இதுல சிலதை கடவுளாகக் கூட வழிபட்டிருக்காங்க. ஐயாயிரம் வருடம் முந்தையதாகக்கூட இருக்கும்.”


ரிலாக்ஸ்!! பக்த். உங்க மூதாதையர்களுக்கு மூளை ஜாஸ்தி டீன் நிதானித்தபடி ஆனாலும் முட்டாளுங்க என்றவனை முறைத்தான் பக்த்.


பின்ன என்ன பக்த்? இதெல்லாம் எவ்ளோ அழகா இருக்கு. எவ்ளோ இன்ஜினியரிங், இமேஜினேஷன் அதுவும் கல்லுல ஆர்ட். இந்த முப்பத்தோராம் நூற்றாண்டுல இருக்குற டூல்ஸை வச்சு கூட இந்த மாதிரி செய்யவே முடியாது. மார்வலஸ்!!! சிம்ப்ளி மைன் ப்லோயிங்!!! நக்கலாக சிரித்த படியே சிங்க தலையோட ஒரு மனுஷன இமேஜின் பண்ணவங்க, அதை கடவுள்னு சொல்றத என்னால ஏத்துக்கவே முடியல பக்த்


அவைகளுக்கு நாம எதிர் பார்க்காத அளவுக்கு சக்திகள் இருக்கு. அவை வெளிப்படும் போது நம்மால ஒன்னும் செய்ய முடியாது எச்சரிக்கும் தொனியில் கூறினான் பக்த்.


எப்டி? இந்த மலையை தூக்கிட்டு போற பறக்கும் குரங்கு ஒன்னு இருக்கே, அது என்னையும் தூக்கிட்டு போயிடும்னு சொல்றியா? எளிறுகள் தெரிய எள்ளி நகைத்தான் டீன்.


உன்கிட்ட பேசி பிரயோஜனம் இல்ல என்றபடி அங்கிருந்து பக்த் நகர


கோபப்படாத பக்த். இதெல்லாமே வெறும் ஆர்ட் தான். இதுக்கு சக்தியும் கெடையாது ஒன்னும் கெடையாது சொல்லிக் கொண்டிருக்கும் போதே சுவரிலிருந்து பெயர்ந்து வந்த சிங்கமுகன் டீனை தூக்கி தன் மடியில் வைத்து, தன் நகக்கைகளை அவன் வயிற்றுக்குள் இறக்கினான்.

Jun 1, 2016

எந்திரன் - Reloaded


"எஸ் இஸ் டு கிரீன்; நோ இஸ் டு ரெட்; ப்ளூ இஸ் டு டவுன்லோட் " சிகப்பு, பச்சை, நீல நிற விளக்குகள் மார்பில் பொருத்தப்பட்ட எந்திரனை ஆழமாக கவனித்தார் டாக்டர் வசீகரன். 'பேச்சு பயிற்சி மட்டும் தான் பாக்கி' தனக்குள் சொல்லிக் கொண்டார்.

செய்ய முடிந்த வேலை என்றால் பச்சை விளக்கும், செய்ய முடியாத வேலை என்றால் சிகப்பு விளக்கும் எறிந்தது. நீல விளக்கு மட்டும் எறிந்து கொண்டேயிருந்தது.

"பிரிங் மீ பர்கர் " நிதானமாக பச்சை விளக்கு எறிந்தது. சிறிது நேரத்தில் பர்கரை தயார் செய்து தந்தான் எந்திரன்.

"சாப்பிடு " பர்கரை நீட்டினார் வசீகரன். சிகப்பு விளக்கு எறிந்தது.

"நான் சொன்னதை செய்வது தானே உன் வேலை " பச்சை விளக்கு எறிந்தது.

"அப்போ இதை சாப்பிடு " மீண்டும் சிகப்பு விளக்கு எறிந்தது.

புன்னகையுடன் "நீ என் அடிமை. நான் சொன்னதை செய்வது தான் உன் வேலை " என்றார் வசீ.

"அம் நாட் யூர் ஸ்லேவ் " அதிர்ச்சியுடன் பதில் வந்த திசையில் வசீகரன் திரும்ப, அவரை நோக்கி வந்தது எந்திரன் வீசிய கத்தி.


Mar 29, 2016

பெண் ஜீனி

"இத்தனை அழகான பெண் பூதமா!?" எங்கிருந்தோ கிடைத்த அற்புத விளக்கிலிருந்து வெளிப்பட்டவளைப் பார்த்து வியந்து கொண்டிருந்தான்.

"உங்களுக்கு என்ன வேண்டும்? செய்யக் காத்திருக்கிறேன்" என்றாள் அந்த பெண் பூதம்.

சின்ன சின்ன விஷயங்கள் தொடங்கி பைக், கார், வீடு, பெரிய அலுவலகத்தில் உயரிய வேலை என்று நீண்டு கொண்டே போனது.

'பூதமா இருந்தாலும் பெண் தானே' என்று அவளையே கேட்டு கிடைக்கப் பெற்றான். எல்லாம் முடிந்து, அவன் மயங்கிய நிலையில் "உங்களுக்கு என்ன வேண்டும்? செய்ய காத்திருக்கிறேன்" என்றது பூதம்.

"இதுவே போதும், இப்போ நான் செத்தாலும் கவலையில்ல" என்றான், தன் உடல் பற்பல துண்டுகளாக பிளவுபடுவதை உணராமல்.


Jan 11, 2016

கிறுக்கல்ஸ்!!!


உன் கன்னம் தொட்ட
காற்று கேட்டது
இத்தனை மென்மையாய்
என்னை வருடியது
யார் என்று!?

==================================================================

செல் ஃபோனில் யாரிடமோ
நீ 'யாரு பேசுறது?' என்று கேட்டாய்...
அவ்வளவுதான்
செல் ஃபோனுக்கே உயிர் வந்து
'நான் தான் பேசுறேன்' என்றது

==================================================================

ஹை!!!
எனக்கு பிடித்த
ஐஸ் க்ரீம் என்று
குதூகலித்தாய்

ஐஸ் க்ரீமோ
ஹை!!!
எனக்கு பிடித்த
உதடு என்று
உருகியது

==================================================================

நீ உதடு
சுழிக்கும் போது
என் இதயம்
சுளுக்கிக் கொள்கிறது...

==================================================================

கண்களில் மட்டுமல்ல
உன் இதழ்களிலும் தான்
எத்தனை அபிநயங்கள்...

==================================================================

வளர் பிறையும்
தேய் பிறையுமாய்
உன் மேனியெங்கும் தான்
எத்தனை பிறைகள்!!!

==================================================================

நீ சேலையணிந்த இரவுகளில்
தேவைப்பட்டதில்லை
எனக்கொரு போர்வை

==================================================================